Verify GST Number is Registered Or Fake
ஏமாறாதே...ஏமாற்றாதே..!
GST வரிவிதிப்பு முறையை பயன்படுத்தி GST வரம்புக்குள் உட்படாத நிறுவனங்களும் அவர்களது ரசீதில் CGST,SGST என்று வரி விதிப்பதாக என் நண்பர்களே பலபேர் தெரிவித்திருக்கிறார்கள்.
அனைவரும் தெரிந்துகொள்ள இதை பதிவிடுகிறேன்.
நிறுவனங்கள் வரி வாங்க அனுமதி உள்ளதா என்பதை கண்டறிய 1 நிமிடம் போதுமானது.
முதலில் அவர்கள் கொடுக்கும் ரசீதில் GSTIN எண் அச்சிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இல்லையென்றால் நீங்கள் வரிசெலுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.
GSTIN எண் இருந்தும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதுவும் 1 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்.
WWW.GST.GOV.IN என்ற இணையதளத்தில் "Search TaxPayer" என்பதை க்ளிக் செய்தால் GSTIN எண் கேட்கும் அதில் உங்கள் ரசீதில் உள்ள எண்ணை பதிவிடுங்கள். பதிவிட்ட உடனே கீழ்வரும் தகவல்கள் தெரியும்:
நிறுவனத்தின் பதிவு பெயர்.
மாநிலம்
பதவு தேதி
நிறுவனத்தின் அமைப்பு
வரிசெலுத்தும் வகை
GST பதிவின் நிலை
என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
அப்படி அந்த எண் இந்த தகவலில் ஒத்துப்போகவில்லை என்றால் நீங்கள் வரிசெதுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.
தகறாரு செய்தால் 14404 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.
மேலும் CORE.NIC.IN என்ற இணையதள முகவரியில் தங்கள் குறைகளையும், குற்றச்சாட்டு களையும் பதிவிடலாம்.
நிறுவனம் ஏமாற்றுகிறது என்றால் இந்த அளவிற்கு நீங்கள் செல்ல தேவையே இருக்காது. மொபைல எடுத்து இரு இந்த நம்பர் இருக்கா இல்லையானு பாக்குறேன்னு சும்மா டைப் பண்ணாலே சார் நீங்க குடுக்க வேணாம் சார் கெளம்புங்க சார்னு சொலிடுவான்.
நான் சாப்பிட்ட முழுதொகையையும் வாங்காமலேயே என்னை ஒரு உணவகத்தில் சார் நீங்க போங்க சார்னு சொல்லி அனுப்பிவச்சிட்டான்.
அரசு குற்றங்களை களைய நமக்கு அனைத்து வழிகளையும், அதிகாரத்தையும் கொடுத்துள்ளது. அதை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முக்கியமா இந்த ஹோட்டல், தண்ணி கேன் போடுறவர்களிடமும், பலசரக்கு கடை, ஜவுளி கடை, எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர் இதுலலாம் பாருங்க...
No comments:
Post a Comment