Mobile Website
Electronic Website
Home & Kitchen
Ticket Booking
Laptop Wesbite
Recharge Website
LED TV Website
Refrigerator
Fashion Website
View All Websites

Search This Blog

Saturday, October 28, 2017

Caning in Singapore

Caning in Singapore சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது?

நம்மூர்ல இருக்கும் புரட்சியாளர்களுக்கு சிங்கப்பூர் அடின்னா எப்படீன்னு தெரியாது என்பதால் தெளிவாக விளக்குகிறேன்.

நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுறயா என்றால் சரி என கட்டுவார்கள் என்பதே அடி எப்படி இருக்கும் என சொல்லும்.
மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்கவேண்டும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊறவைப்பார்கள் குச்சி உடையாமல் இருக்க. புண் ஆனால் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும்.

முழு நிர்வாணமாக கீழே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள்.

முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பின்பு மயக்கம் தெளியவைத்து தெளியவைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார் அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று மாறிக்கொள்வார்கள். உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும்.

மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார்.

4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது.

தசை எப்படி கிழியும் என்ற போட்டோகள் இணையத்திலே இருக்கின்றன. தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலே செய்வது போல் கருப்புபணம் பதுக்கினால் 24 அடி விழும்.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை ஏன்னா இந்த அடி தான். ரவுடித்தனம், திருட்டு, கொள்ளையை ஒழிச்சதும் இந்த அடிதான்.

Awareness About Indian GST


அந்த பெண்மணி கடைக்குள் நுழைந்து, ஒரு பொருளைக் கேட்கிறார்..
கடைக்காரர் எடுத்துக் கொடுத்து விட்டு " 130 ரூவாமா..!"

பெண்மணி : "என்னா சார் இது, போனதடவை 100க்குத்தானே குடுத்தீங்க..?"
"அட.. அதான் அந்தப் பாவி மோடி, GSTன்னு 28% போட்டு விலைவாசில்லாம் எகிறிப் போச்சே..?"

"எல்லாத்துக்கும் 28%னு யார் சொன்னா..? 0, 5%, 12%,18%, 28%னு அஞ்சு slabs.. லக்ஸரிக்கு மட்டும்தான் 28%; மத்த பொருளுக்கு கம்மிதான்..! அத்தியாவசிய பொருட்களுக்கு GSTயே கிடையாது, 0%..! ஆனா, நீங்க எல்லாத்துக்கும் இஷ்டத்துக்கு விலை ஏத்தறீங்க..?"

"அட.. இன்னாமா நீ..? GSTயால விலவாசி 'எக்கச்சக்கமா' ஏறிப்போச்சின்னு நாட்ல அல்லாரும் கதறின்னு இருக்றாங்களே பாக்லியா..?"
"அத நம்ப நான் முட்டாள் இல்ல..! இந்த சாமானுக்கு 18% தான் GST..! அப்புறம் ஏன் இவ்ளோ விலை ஏத்தறீங்க..?"

"இது இன்னாடா இந்தம்மா பேஜாரு..?"

"நீங்க முதல்ல வித்தது 100 ரூவா..! அப்போ இருந்தது: 2% VAT + 8% TNGST + Surcharge, Cess எல்லாம் சேத்து, மொத்தம், 12%. அப்டின்னா, உங்க base வில 88 ரூவா.. இப்போ இதுக்கு GST, 18%.. ஸோ, 88 + 18 %.. 105 ரூவாதான வில வெக்கணும்..? ஆனா, நீங்க ஏன் 130 ரூவாங்கிறீங்க..? என்னா அநியாயம் இது..?"
"இதின்னாடா இது..? எங்களுக்கு லாபம் வேணாவா..? "

"இதுக்கு முன்னாடி base விலைல உங்களுக்கு லாபம் இருந்துச்சுல்ல..? அதே லாபம் இப்பவும்தானே உங்களுக்கு வரும்..?"

கடைக்காரர் தன் கடை கிளர்க்கிடம் கடுப்பாக: "இன்னாடா இந்தம்மா புரியாத பேசுது..? இப்ப நாமோ மொத்த டாக்ஸும் கொண்டுணு போயி பாழாப்போன கவர்மெண்ட்ல கட்டத் தாவலியா..?"

"முன்னாடியும், கலெக்ட் பண்ண டாக்ஸ கொண்டு கவர்மெண்டலதான கட்னீங்க..?"

கிளர்க் மெதுவாய் முணுமுணுக்கிறான்: "கலெக்ட் பண்ற எல்லா டாக்ஸையும் கட்னதில்லீங்க..! 'கொஞ்சமா'த்தான் கட்டுவோம்..!"

"ஓ..! அதையும் நீங்களே எடுத்துக்குவீங்களா..? அப்ப செம லாபம் பண்ணிட்டு இருந்திருக்கீங்க... ம்ம்ம்ம்ம்..?"

கடைக்காரர் : "ஆங்...? Excise, CTO ஆபீஸருங்கோ அல்லாருக்கும் மாமூல் வெட்ட வேணாவா..? அதோட மினிஸ்டருக்கு , போலீசுக்கு வருஷாவருஷம் லம்ப்பா குடுக்ணும்..? மேட்டர் முன்ன மாத்ரியே இர்ந்தா நாங்க ஏன் விலை ஏத்தப் போறோம்..? ஆனா, ஆடிட்டரு, 'இன்மே ஒண்ணியும் பண்ண முடியாது; கலெக்ட் பண்ண டாக்ஸ கவர்மெண்ட்ல கொண்டு ஒழுங்கா கட்டியாவணும்; இல்லன்னா பிரச்சன ஆயிடும்'ன்றானே..? கம்ப்யூட்டரே கண்டு புடிச்சிருமாமே..? டாக்ஸ அல்லாத்தியும் அப்டியே கொண்டு கட்டித்தான் ஆவணும்னா, நாங்க விலை ஏத்த வேணாவா..?"

"நீங்க முன்னாடி வரிஏய்ப்பு செஞ்சீங்க.. அதுக்காக அவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தீங்க..! இப்பதான் நினைச்சாலும் வரிஏய்ப்பு செய்ய முடியாதே..? அப்புறம் எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்..? எல்லாரும் சேந்து முன்ன செஞ்சிட்ருந்த வரிஏய்ப்ப இப்ப செய்ய முடியலங்கறதுனால, விலைய ஏத்தி, பழிய GST மேல போட்றதா..? புது GST போட்டாலும் இதுக்கு சரியான வில 105 ரூவாதான்..! ஆனா, நீங்க 'மோடி ஒழிக..'ன்னு கூவிட்டு, 130 ரூவான்னு விலை ஏத்தறீங்க....? எவ்ளோ நாள் ஏமாத்துவீங்க..? விலைகள் குறைஞ்சாவணும்....!"
====================
நண்பர்களே..! 60 வருடமாய் இருந்த வணிகவரி ஏய்ப்பிற்கு எதிராக மத்திய அரசாங்கம் போர் தொடுக்கும் போது, மக்கள் நாம் அரசாங்கத்துடன் சேர்ந்து போராட வேண்டுமா, அல்லது, அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டுமா..?

TO Create Awareness About Indian GST. Please Share !!! This Message !!!!

Thursday, October 26, 2017

Verify GST Number is Registered Or Fake


ஏமாறாதே...ஏமாற்றாதே..!
GST வரிவிதிப்பு முறையை பயன்படுத்தி GST வரம்புக்குள் உட்படாத நிறுவனங்களும் அவர்களது ரசீதில் CGST,SGST என்று வரி விதிப்பதாக என் நண்பர்களே பலபேர் தெரிவித்திருக்கிறார்கள்.
அனைவரும் தெரிந்துகொள்ள இதை பதிவிடுகிறேன்.

நிறுவனங்கள் வரி வாங்க அனுமதி உள்ளதா என்பதை கண்டறிய 1 நிமிடம் போதுமானது.
http://needfullfill.blogspot.in/p/best-online-offers-discounts.html

முதலில் அவர்கள் கொடுக்கும் ரசீதில் GSTIN எண் அச்சிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இல்லையென்றால் நீங்கள் வரிசெலுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.

GSTIN எண் இருந்தும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதுவும் 1 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம். 
WWW.GST.GOV.IN என்ற இணையதளத்தில் "Search TaxPayer" என்பதை க்ளிக் செய்தால் GSTIN எண் கேட்கும் அதில் உங்கள் ரசீதில் உள்ள எண்ணை பதிவிடுங்கள். பதிவிட்ட உடனே கீழ்வரும் தகவல்கள் தெரியும்:

நிறுவனத்தின் பதிவு பெயர்.
மாநிலம்
பதவு தேதி
நிறுவனத்தின் அமைப்பு
வரிசெலுத்தும் வகை
GST பதிவின் நிலை

என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

அப்படி அந்த எண் இந்த தகவலில் ஒத்துப்போகவில்லை என்றால் நீங்கள் வரிசெதுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.

தகறாரு செய்தால் 14404 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

மேலும் CORE.NIC.IN  என்ற இணையதள முகவரியில் தங்கள் குறைகளையும், குற்றச்சாட்டு களையும் பதிவிடலாம்.

நிறுவனம் ஏமாற்றுகிறது என்றால் இந்த அளவிற்கு நீங்கள் செல்ல தேவையே இருக்காது. மொபைல எடுத்து இரு இந்த நம்பர் இருக்கா இல்லையானு பாக்குறேன்னு சும்மா டைப் பண்ணாலே சார் நீங்க குடுக்க வேணாம் சார் கெளம்புங்க சார்னு சொலிடுவான்.

நான் சாப்பிட்ட முழுதொகையையும் வாங்காமலேயே என்னை ஒரு உணவகத்தில் சார் நீங்க போங்க சார்னு சொல்லி அனுப்பிவச்சிட்டான்.

அரசு குற்றங்களை களைய நமக்கு அனைத்து வழிகளையும், அதிகாரத்தையும் கொடுத்துள்ளது. அதை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முக்கியமா இந்த ஹோட்டல், தண்ணி கேன் போடுறவர்களிடமும், பலசரக்கு கடை, ஜவுளி கடை, எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர் இதுலலாம் பாருங்க...




Tuesday, October 17, 2017

Happy Diwali


Wish A Happy Diwali 

May Millions of Lamps Illuminate Your Life With Endless Joy , Prosperity, Health and Wealth Forever.. Wishing You and Your Family a Very Happy Diwali !!


By www.NeedFullFill.blogspot.in

Admin


Category Based

Amazon Recharge , Bills Payment