Mobile Website
Electronic Website
Home & Kitchen
Ticket Booking
Laptop Wesbite
Online Payment
LED TV Website
Refrigerator
E-Bike: Fuel Bike

Search This Blog

Saturday, October 28, 2017

Awareness About Indian GST


அந்த பெண்மணி கடைக்குள் நுழைந்து, ஒரு பொருளைக் கேட்கிறார்..
கடைக்காரர் எடுத்துக் கொடுத்து விட்டு " 130 ரூவாமா..!"

பெண்மணி : "என்னா சார் இது, போனதடவை 100க்குத்தானே குடுத்தீங்க..?"
"அட.. அதான் அந்தப் பாவி மோடி, GSTன்னு 28% போட்டு விலைவாசில்லாம் எகிறிப் போச்சே..?"

"எல்லாத்துக்கும் 28%னு யார் சொன்னா..? 0, 5%, 12%,18%, 28%னு அஞ்சு slabs.. லக்ஸரிக்கு மட்டும்தான் 28%; மத்த பொருளுக்கு கம்மிதான்..! அத்தியாவசிய பொருட்களுக்கு GSTயே கிடையாது, 0%..! ஆனா, நீங்க எல்லாத்துக்கும் இஷ்டத்துக்கு விலை ஏத்தறீங்க..?"

"அட.. இன்னாமா நீ..? GSTயால விலவாசி 'எக்கச்சக்கமா' ஏறிப்போச்சின்னு நாட்ல அல்லாரும் கதறின்னு இருக்றாங்களே பாக்லியா..?"
"அத நம்ப நான் முட்டாள் இல்ல..! இந்த சாமானுக்கு 18% தான் GST..! அப்புறம் ஏன் இவ்ளோ விலை ஏத்தறீங்க..?"

"இது இன்னாடா இந்தம்மா பேஜாரு..?"

"நீங்க முதல்ல வித்தது 100 ரூவா..! அப்போ இருந்தது: 2% VAT + 8% TNGST + Surcharge, Cess எல்லாம் சேத்து, மொத்தம், 12%. அப்டின்னா, உங்க base வில 88 ரூவா.. இப்போ இதுக்கு GST, 18%.. ஸோ, 88 + 18 %.. 105 ரூவாதான வில வெக்கணும்..? ஆனா, நீங்க ஏன் 130 ரூவாங்கிறீங்க..? என்னா அநியாயம் இது..?"
"இதின்னாடா இது..? எங்களுக்கு லாபம் வேணாவா..? "

"இதுக்கு முன்னாடி base விலைல உங்களுக்கு லாபம் இருந்துச்சுல்ல..? அதே லாபம் இப்பவும்தானே உங்களுக்கு வரும்..?"

கடைக்காரர் தன் கடை கிளர்க்கிடம் கடுப்பாக: "இன்னாடா இந்தம்மா புரியாத பேசுது..? இப்ப நாமோ மொத்த டாக்ஸும் கொண்டுணு போயி பாழாப்போன கவர்மெண்ட்ல கட்டத் தாவலியா..?"

"முன்னாடியும், கலெக்ட் பண்ண டாக்ஸ கொண்டு கவர்மெண்டலதான கட்னீங்க..?"

கிளர்க் மெதுவாய் முணுமுணுக்கிறான்: "கலெக்ட் பண்ற எல்லா டாக்ஸையும் கட்னதில்லீங்க..! 'கொஞ்சமா'த்தான் கட்டுவோம்..!"

"ஓ..! அதையும் நீங்களே எடுத்துக்குவீங்களா..? அப்ப செம லாபம் பண்ணிட்டு இருந்திருக்கீங்க... ம்ம்ம்ம்ம்..?"

கடைக்காரர் : "ஆங்...? Excise, CTO ஆபீஸருங்கோ அல்லாருக்கும் மாமூல் வெட்ட வேணாவா..? அதோட மினிஸ்டருக்கு , போலீசுக்கு வருஷாவருஷம் லம்ப்பா குடுக்ணும்..? மேட்டர் முன்ன மாத்ரியே இர்ந்தா நாங்க ஏன் விலை ஏத்தப் போறோம்..? ஆனா, ஆடிட்டரு, 'இன்மே ஒண்ணியும் பண்ண முடியாது; கலெக்ட் பண்ண டாக்ஸ கவர்மெண்ட்ல கொண்டு ஒழுங்கா கட்டியாவணும்; இல்லன்னா பிரச்சன ஆயிடும்'ன்றானே..? கம்ப்யூட்டரே கண்டு புடிச்சிருமாமே..? டாக்ஸ அல்லாத்தியும் அப்டியே கொண்டு கட்டித்தான் ஆவணும்னா, நாங்க விலை ஏத்த வேணாவா..?"

"நீங்க முன்னாடி வரிஏய்ப்பு செஞ்சீங்க.. அதுக்காக அவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தீங்க..! இப்பதான் நினைச்சாலும் வரிஏய்ப்பு செய்ய முடியாதே..? அப்புறம் எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்..? எல்லாரும் சேந்து முன்ன செஞ்சிட்ருந்த வரிஏய்ப்ப இப்ப செய்ய முடியலங்கறதுனால, விலைய ஏத்தி, பழிய GST மேல போட்றதா..? புது GST போட்டாலும் இதுக்கு சரியான வில 105 ரூவாதான்..! ஆனா, நீங்க 'மோடி ஒழிக..'ன்னு கூவிட்டு, 130 ரூவான்னு விலை ஏத்தறீங்க....? எவ்ளோ நாள் ஏமாத்துவீங்க..? விலைகள் குறைஞ்சாவணும்....!"
====================
நண்பர்களே..! 60 வருடமாய் இருந்த வணிகவரி ஏய்ப்பிற்கு எதிராக மத்திய அரசாங்கம் போர் தொடுக்கும் போது, மக்கள் நாம் அரசாங்கத்துடன் சேர்ந்து போராட வேண்டுமா, அல்லது, அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டுமா..?

TO Create Awareness About Indian GST. Please Share !!! This Message !!!!

No comments:

Post a Comment

Category Based